பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

301


“மங்கையரைச் சேர்ந்த கணவருடைய உள்ளத்து விருப்பத்தை அம் மகளிர்க்குத் துணையாய் நின்று அவர் உள்ளத்திலிருந்து நீங்காது காந்தி எரியும் தன்னையை முன்னம் செய்தாய் இப்போது அம் மகளிர் நலத்தைக் கைக் கொண்டு பின் அவர்க்கு அருளாத ஆடவரால் தம் தலம் போன தனிமையிடத்தே நின்று வருந்திய மகளிர்க்குத் துணை யாகாமல் வருத்தம் செய்தல் உனக்குத் தக்கதன்று"

"மாலையே! நீ அறிவு மயங்கினை எம் கேள்வரை முன்பு போல் மனத்தைக் கனலுமாறு செய்து இங்குத் தரவும் இல்லை எனவே நீ எனக்குத் துணையில்லை. தான்் பிரிந்தி ருந்த மகளிர்க்கு அப் பிரிவால் தோன்றிய நோயின் வடிவு நீயாவாய், கூடியவர்க்கு அவர் பெறும் இன்பத்துக்குத் தெப்ப மாய் உள்ளாய். இவ்வாறு நன்மையாகாத செயல்களைச் செய்து ஒழுகும் செயல்களே அல்லாது உனக்கு நன்மையாய்ச் செய்யும் செயல்களே இல்லையோ’ என்றாள்

"திருத்தமான அணிகளையுடைய மடப்பம் உடையவள் வருந்தியவிடத்தே தொலைவான நிலத்தில் உள்ள காதலர் பகைவரிடம் செய்கின்ற போர்த் தொழில்களைப் போய் முடித்து, அவரது மண்ணைக் கைக்கொண்டு, பரவிய இருள் பரப்பை ஞாயிறு போக்கியதைப் போன்று, அவளது வருத்தம் நீக்க வந்தார். இஃது என்ன வியப்போ” இவ்வாறு கண்டவர் கூறினர்

340. வருந்தினள் நெஞ்சமொடு பெரிதே

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளனித்து அம் சிறை படையாக, அரைசு கால்கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்பl கேள்: கற்பித்தான்் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண் தப்பித்தான்் பொருளேபோல் தமியவே தேயுமால், ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண். கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியேபோல், தமியவே தேயுமால்,