பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

303


கூர்மையைப் போல் கூர்மை உடையதாய், அவன் புத்தேளில் புகுந்தாலும் அவனை நுகருமாறு செய்யாமல் விடாது 象

பெருமையனே செய்ந்நன்றி கேடானது பொய்ச் சூளுற வான தீவினையின் இயல்பு முன் கூறிய அத்தகைய இயல் புடையது இனி நீ அத் தன்மைமையுடையவனாய் உள்ளாய் இதை நினைந்து பார் இவள்தான்் தன் பகைவனுடன் சினம் கொண்ட மன்னன் அவன் மதிற்புறத்தே போய்விட்ட வினையினால் முற்றுகையிட்டுள்ளவனுக்கு வந்த வருத்தம் போன்று, மணம் விரைவில் முடிவதற்கு விரைதல் வரும் மனத்தால் பெரிதும் வருத்தம் அடைந்தாள் இனி அந்த வருத்தம் நீங்கும்படி விரைந்து தலைவி மணந்து கொள் வாயாக என்று வரைவு வேண்டினாள் -

341. பருவம் கழிதற்கு முன்வருவர் அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும், கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென, விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால், அறம் துறந்து ஆயிழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் பிறங்கு நீர் சடைக் கரந்தான்் அணி அன்ன நின் நிறம் பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ? கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம் வெருவந்த ஆறு என்னார், விழுப்பொருட்கு அகன்றவர் உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ? கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால் 'ஒதுக்கு அரியநெறி என்னார், ஒண்பொருட்கு அகன்றவர் புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின் கதுப்பு உலறும் கவினையான், காண்டலும் காண்பவோ?