பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


ஆங்கு அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்மை ஈர் ஒதி மட மொழியோயே! - கலி 150 நீர்நிலையின் அண்மையில் மாலைபோல் விளங்கும் கொன்றை மலர் மாலையையுடைய சிவனின் திரிபுரத்தை எய்தலால் தோன்றின முழங்கும் வெப்பத்தையுடைய தீ வானில் உயர்ந்து விளங்குவது போல், செறிவான கதிர்களை யுடைய ஞாயிறு எங்கும் சுடும் அதனால் காய்ந்த மூங்கில் தம்மிலே இழைதலைக் கைக்கொண்டு வானிலே பொருந்த உயர்ந்து வெப்பத்தைச் செய்யும், விலங்குகள் பலகாலும் திரிதலால் மயங்கிய வழிகளை உடைய மலைகள் பரந்து குறுக்கிட்டு விளங்கும் இத்தகைய இயல்பு கொண்ட அரிய சுரத்தை ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே, தாம் எண்ணிய செயல்களை அடைவதால் உண்டான விருப்பத்தால் அறத்தைக் கைவிட்டுக் கொடிய காட்டைக் கடந்து விளங்கும் நீரைச் சடையில் மறைத்தவனைப் போன்ற பொருளை ஈட்ட எண்ணிப் பிரிந்தவர், அழகை அடைய உன் நிறம் பசலை கொண்டு இத் தன்மையாக உன்னைக் கை விடுதலும் செய்வாரோ! அவ்வாறு செய்யார்

வெந்த யானையை உடைய பல வழிகளை உடையதாய்க் கற்கள் காய்ந்த காட்டை அஞ்சத்தக்க வழி என்று எண்ணாத வராய்க் காளையான ஊர்தியை உடைய சிவனைப் போன்ற சிறந்த பொருளின் பொருட்டுப் பிரிந்து போனவர் ஒளியுடைய உன் வடிவை இழந்து நீ இத் தன்மையுடைய அப் பொருளை நினைக்கவும் செய்வாரோ? செய்யார்!

“ஞாயிறு கிழக்கில் தோன்றிக் கொதித்துப் பரந்து தான்் கொண்ட கோடைக் காலத்தில் போவதற்கு அரியது என்று எண்ணாதவராய்ப் புதிய திங்களான சிறந்த பொருளுக்குப் பிரிந்து போனவர், பொன்னால் செய்த தலைக் கோலங்கள் தாழ்ந்து விளங்கிய நின் மயிர் அவ்வாறின்றிக் காய்கின்ற இயல்புடையாய் நீ விளங்க அந்தப் பொருள் ஆசையை மனத்தால் காணவும் செய்வாரோ அவ்வாறு செய்யார்