பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தண்ணம் துறைவன் நல்கின், ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே. - ஜங் 168 “பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை துறையில் தங்கும் தோணியிலே கூடு அமைத்து முட்டையிட்டு வாழும் குளிர்ந்த துறைவன். அவன் வரைந்து கொண்டு தன் அன்பைச் செய்வானாயின், ஒளிபொருந்திய நெற்றியை யுடைய அரிவை பாலுண்டு துன்பம் நீங்கப் பெறுவாள்' என்று தோழி அறத்தோடு நின்று கூறினாள்

67. என் கண்கள் பசந்தன! பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை பொன் இணர் ஞாழல் முனையின், பொதியவிழ் புன்னை.அம் பூஞ் சினைச் சேக்குந் துறைவன் நெஞ்சத்து உண்மை அறிந்தும் என்செயப் பசக்கும் - தோழி என் - கண்ணே? - ஐங் 169 “பெரிய கடற்கரையில் வாழும் சிறு வெண்காக்கை பொன் போலும் மலர்க் கொத்துகளை உடைய ஞாழலை வெறுத்தால், அரும்பு அவிழும் புன்னையின் பெரிய கிளை யில் தங்கும் துறைவன், என் நெஞ்சத்து இருப்பதை அறிந்து வைத்தும், தோழி என் கண்கள் எதனால் பசலை கொண்ட னவோ! அறியேன்!” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறினாள்

68. ஒளிமங்குதல் ஏன்? பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் 'நல்லன் என்றி ஆயின், பல் இதழ் உண்கண் பசத்தல் - மற்று எவனோ? - ஐங் 170 “பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை கரிய உப்பங்கழியில் மலர்ந்த நெய்தலைச் சிதைக்கும் துறையை யுடைய தலைமகனை நல்லன் என்று கூறு கின்றாய் நல்லவன் என்றால் பல இதழ்களையுடைய மலர் போலும் என் மையுண்ட கண்கள் ஒளிமங்குதல் யாது கருதியோ! அறியேன்!” என்று தலைவி யுரைத்தாள்