பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"தொண்டி நகரத்தின் நீர்த் துறையில் மலர்ந்த குளிர்ந்த நல்ல நெய்தலின் மணம் கமழும் பின்னல் இடப்பட்ட கரிய கூந்தலையுடைய இவளால் வருத்தப்பட்டோன், இரவில் இனிய துயில் பெறாது அரிய மணியை இழந்துவிட்ட பாம்பின் மிக்க துயரத்தை அடைந்து வருந்துவன். இதனை அறியாது தலைவனை இகழ்ந்த என் அறியாமை இருந்தவாறு என்?” என்று பாங்கன் தனக்குள் கூறினான்.

72. அவளைச் சேர்தல் கூடும்!

அணங்குடைப் பணித் துறைத் தொண்டி அன்ன

மனங் கமழ் பொழிற் குறி நல்கினள் - நுணங்கு இழை

பொங்கு அரி பரந்த உண்கண்

அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே. - ஜங் 174

"தெய்வத்தையுடைய குளிர்ந்த துறை பொருந்திய தொண்டி நகரத்தைப் போன்ற, நறுமணம் கமழும் சோலை யில், மெலிவுடைய எமக்கு, நுட்பமான அணியையும் மிகுந்த சிவந்த வரிகளையும் உடைய கண்ணையும் அழகு மிகும் மேனியையும் உடையவள் இனிமேல் கூடுதற்குரிய இடம் இஃது எனக் குறித்தனளாகலான், யான் போய் அவளைச் சேர்தல் தவறாது கை கூடும்” எனத் தலைமகன் தன் மனத் துள் கூறினான்.

73. தோழியுடன் வா

எமக்கு நயந்து அருளினை ஆயின், பனைத் தோள்

நல்நுதல் அரிவையொடு மென் மெல இயலி,

வந்திசின் வாழியோ மடந்தை -

தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே - ஜங் 175

“இப்போது எம்மை விரும்பி வந்து இன் நலத்தை தந்தருளினாய் எனினும், மங்கையே, இனி எல்லாச் சிறப்பை யும் உடைய தொண்டி நகர் போலும் நின் பலவாகிய குணங் களைக் கைக் கொண்டு, பெருந் தோளாலுடன் மெல்ல வருவாயாக!” என்று தலைவன் தலைவியைப் பார்த்துச் சொன்னான்