பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

35


74. செய்த தவறு யாது? பண்பும் பாயலும் கொண்டனள் - தொண்டிச் தண்கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி, ஐது அமைந்து அகன்ற அல்குல், கொய்தளிர்மேனி! - கூறுமதி தவறே. - ஐங் 176 “தொண்டி நகரில் குளிர்ந்த புதிய மலரின் மணம் வீசும் தொடியையும், அழகிதாய் அகன்ற அல்குலையும், கொய்யப் பட்ட தளிர் போன்ற மேனியையும் உடையவளே, என் பண்பையும் உறக்கத்தையும் நின் தோழி கவர்ந்து கொண்டு என்னிடம் அவை இல்லாதவை ஆக்கினாள். ஆதலால் அவ்வாறு கொள்வதற்கு யான் செய்த தவறுதான்் யாது?” என்று தலைவன் தோழியை நோக்கி வினவினாள். 75. தோள் கண்டவர் வருத்துவர் தவறு இலர் ஆயினும், பனிப்ப மன்றஇவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு முண்டக நறுமலர் கமழும் தொண்டி அன்னோள் தோள் உற்றோரே. - ஜங் 177 “ஒன்றை ஒன்று மேற்பட்டு எழும் அலை மோதலால் கொழித்திடப்பட்ட மணல் பரவிய உயர்ந்த கரையை உடைய துறையில், நீர் முள்ளியின் நறுமண மலர்களின் மணம் கமழும் சிறப்பையுடைய தொண்டி நகர் போன்றவளின் தோளைக் கண்டவர் தவறு ஒன்றும் செய்திலராயினும் தெளிவாக நடுக்கம் உற்று வருந்துவர். ஆகலின், யான் கூறு மாறு என்ன?” என்று தலைமகனுக்கு நகையாடி தோழி கூறினாள்.

76. வாழ்தல் ஒல்லுமோ? தோளும் கூந்தலும் பல பாராட்டி, வாழ்தல் ஒல்லுமோ - மற்றே - செங்கோற் குட்டுவன் தொண்டி அன்ன எற்கண்டு நயந்து, நீ நல் காக்காலே? - ஐங் 178 "செங்கோன்மையுடைய குட்டுவன் என்னும் சேர மன்னனுக்குரிய தொண்டி நகர் போன்ற என்னை, என் குறை