பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

37


குப்பை வெண் மணல் குரவை நிறுஉம் துறை கெழு கொண்கன் நல்கின், உறைவு இனிது அம்ம - இவ் அழுங்கல் ஊரே - ஐங் 181 "நெய்தல் மலரைப் போன்ற கண்களையும் நுண்மையான திரட்சி பொருந்திய வளையணிந்த பருத்த தோளையும் உடையவராய் விளையாடிய இளமகளிர் குவிந்த வெண் மணலில் குரவைக் கூத்து ஆடும் துறை பொருந்திய கொண் கன் நம்மை மணந்து கொள்ளு முகத்தான்் அருள் செய் வானாயின், அலரான ஆராவரத்தையுடைய இந்த ஊர் வாழ்தற்கு இனிதாகும்” என்றாள் தோழியிடம் தலைவி

80. கடவுள் அல்லன்

நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கை புனை நறுந் தார் கமழும் மார்பன்அருந் திறற் கடவுள் அல்லன் - பெருந் துறைக் கண்டு இவள் அணங்கியோனே.

- ஜங் 182 “பெரிய நீர்த் துறையில் இவளைக் கண்டு வருத்தம் அடையச் செய்தவன் தடுத்தற்கு அரிய கடவுளோ, அல்லன். நெய்தல் மலரின் மணமிக்க மலரைச் செருந்தி மலரோடு கலந்து அழகாகக் கட்டப்பட்ட நறிய மாலையின் மணம் கமழும் மார்பையுடைய ஆண் மகனாவான்” என்று தோழி அறத்தொடு நின்றாள்.

81. காலை வரினும் களைஞர் இலர்

கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன், குறும்பொறை நாடன், நல் வயலூரன், தண் கடற் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின் கடும் பகல் வருதி - கையறு மாலை - கொடுங் கழி நெய்தலும் கூம்பக், காலை வரினும் களைஞரோ இலரே. - ஐங் 183 “துன்பத்தை உண்டாக்கும் மாலைப் பொழுதே, கூட்ட மாய் அருவிகள் பாயும் கானம் பொருந்திய நாடனும், சிறிய