பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

41


சங்கு-பத்து 89. மலைவாழ் அணங்கினும் அரியள் கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கைக், கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல், கானல் ஞாழல் கவின் பெறு தழையள் வரைஅரமகளிரின் அரியள் என் நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. - ஐங் 191 தலைவன், “கடற்கரையில் அலையினால் கொணரப் பட்டுச் சேர்க்கப்பட்ட சங்கினால் சமைக்கப்பட்ட வளை அணிந்த முன் கையையும், கழியில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்த கரிய கூந்தலையும், கான லில் நின்ற ஞாழலின் தழையால் செய்த அழகிய தழை யுடையையும் உடையவள். நிறையால் கொள்வதற்கு அரிய என் உள்ளத்தைக் கொண்டு மறைந்தவள் சூரர மகளிரைப் போல் பெறுவதற்கு அரியவள் ஆவாள்!” என்று தன் தோழனுக்கு மனங் கவர்தாளின் மாண்பினைச் சொன்னான்.

90. நெகிழ்ந்த வளைகள் செறிந்தன கோடு புலங் கோட்ப, கடல் எழுந்து முழங்க, பாடு இமிழ் பணித் துறை ஒடுகலம் உகைக்கும் துறைவன் பிரிந்தென,'நெகிழ்ந்தன, வீங்கின மாதோ - தோழி! என் வளையே! - ஐங் 192 "தோழியே! சங்குகள் கரையில் வந்து உலவவும், கடலில் அலைகள் எழுந்து ஒலிக்க, ஒலித்தலையுடைய குளிர்ந்த துறையில் ஒடுதற்குரிய கலங்களை நீரில் செலுத்தும் துறை வன் முன்பு பிரிந்ததால் நெகிழ்ந்து நீங்கிய என் வளைகள் அவன் வருகையால் முன் கையில் கிடந்து பொருந்தின” என்று தலைவி உவகையுடன் தோழியிடத்துக் கூறினாள்.

91. வளையல்கள் நல்லனவோ?

வலம்புரி உழுத வார் மணல் அடைகரை இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்