பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மரத்தையும், கரையில் மோதிச் சிதறுகின்ற அலைகளால் வீசப்படும் நீர்த்துளிகளுக்கு இடமான நீர்ப்பரப்பையும் கொண்ட மெல்லிய கங்ற்க்ரையும் உடைய தலைவன் பிரிந் தான்ாக, பல இதழ்களை உடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் உறங்காமல் வருத்துகின்றன. காம நோய் என்பது அத்தன்மையதோ?” என்று தலைவி தோழிக்கு உரைத்தாள்

101. துயிலாத ஒருத்தி நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து, இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, நனந்தலை உலகமும் துஞ்சும், ஒர் யான் மன்ற துஞ்சாதேனே. - பதுமனார் குறு 6 "இடை யாமம் செறிந்த இருளை உடையதாக உள்ளது: மக்கள் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயில்கின்றனர் அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் துயிலும்போது யான் ஒருத்தியே துயிலாது தனியளாயினேன்” என்று தலைவி தோழி யிடம் இயம்பினாள்

102. நீதான்் எப்பிறவியிலும்! அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை ஆயினும், நீ ஆகியர் எம் கணவனை, யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

- அம்மூவனார் குறு 49 “அணிலின் பல்லை ஒத்த முள்ளை உடைய தாது முதிர்ந்த தாழைச் செடியையும், நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய நீரையும் உடைய கற்கரையை உடைய தலைவ, இப் பிறப்பு நீங்கப்பெற்று மறுபிறப்பு உண்டாயினும், என்னுடைய தலைவனாய் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலியாக யானே ஆகுகவேன்!” என்றாள் அன்புறவு கொண்ட தலைவி தலைவனிடம்