பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ

103. எல்லாரும் விரும்புகின்றனர் கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மாமலர் நூல் அறு முத்தின் காலொடு பாறித் துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; எந்தையும் கொடிஇயர் வேண்டும்; அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

- குன்றியனார் குறு 51 "வளைவான முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியையுடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்து களைப் போலக் காற்றால் சிதறி, நீர்த்துறைகள் உள்ள இடங்கள் தோறும் பரவுவதற்கு இடமாகிய தூய மணலை உடைய கடற்கரைக்குத் தலைவனே! யானும் விரும்புதலை உடையேன்; நம் தாயும் அவன் பால் மிக்க விருப்பத்தைக் கொண்டுள்ளாள்; நம் தந்தையும் அவனுக்கே நின்னை மணம் செய்து கொடுக்க விரும்புவான்; ஊரிலுள்ளோரும் அவனோடு நின்னைச் சேர்த்தே அலர் தூற்றுவர்,” என்று தோழி தலைமகளுக்குக் கூறினாள்

104. துன்பம் மிகுந்த உறையுள் மாக் கழி மணிப் பூக் கூம்பத், துத் திரைப் பொங்கு பிதிர்த் துவலையொடு மங்ககுல் தைஇ, கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட்டு ஆகும் சில் நாட்டு அம்ம இச் சிறு நல் ஊரே.

- நெய்தற் கார்க்கியர் குறு 55 "இந்தச் சிறிய நல்ல ஊரானது, பெரிய கழியினிடத்தில் உள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி, தூய அலை யிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு முகிலைப் பொருந்திச் செயலறும்படி வந்த தடவுதலையுடைய வாடைக் காற்றோடு துன்பத்தைத் தரும் தங்குமிடத்தைப் பெற்றதா கின்ற சில நாள்களைக் கொண்டது” என்று தோழி தலை வனுக்கு உணர்த்தினாள்