பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


105. எம் உயிர் நீங்குவதாக பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, இருவேம் ஆகிய உலகத்து, ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

- சிறைக்குடி ஆந்தையார் குறு 57 "தோழி! செய்யத் தகுவதாகிய முறையை அறிந்து, பிறவி தோறும் தலைவனும் தலைவியுமாக உடலால் இரு வேறாக இருந்து வந்த இவ் உலகத்தில், இப்போதைய பிரிவினால் ஒருவராகிய துன்பத்தினின்றும் யாம் நீங்கித் தப்புவதற்கு, பூவானது தம்மிடைப்பட்டாலும் அச் சிறு நொடிப் பொழுதே பல ஆண்டுகள் கடந்தாற் போன்ற துன்பத்தை உண்டாக்கும் இயல்பை உடைய நீரின்கண் வாழும் மகன்றிற் பறவைகளின் சேர்க்கையைப் போல, பிரிதற்கு அருமையான காமத்தோடு எம் உயிர் போவதாக" என்றாள் தலைவி காப்புமிகுதிக் கண் தோழியிடம்.

106. ஆற்ற இயலாத நோய் ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து - அளியதாமே - கொடுஞ் சிறைப் பறவை, இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

- தாமோதரன் குறு 92 "கதிரவன் மறையவும், அகன்ற இடம் பொருந்திய வானத் தில், வளைந்த சிறகுகளை உடைய இரக்கத்திற்குரிய பறவை கள் தாம் தங்கும்படி உயர்ந்த வழியின் அயலில் வளர்ந்த கடம்ப மரத்தில் உள்ள கூட்டில் இருக்கும் குஞ்சுகளின் வாயின் உள்ளே செருகும் பொருட்டு, இரையைத் தம் அலகுகளால் எடுத்துக் கொண்டு விரைந்து செல்லும்” என்று தலைவி மாலைப் பொழுது வந்து விட்டதால் இனிக் காம நோயை ஆற்ற இயலாது என்று உணர்த்தினாள்