பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

49


107. அம்பலத்திற்கு வந்து விட்டது யானே ஈண்டையேனே என் நலனே ஆன நோயொடு கானல் அஃதே. துறைவன் தம் ஊரானே; மறை அலர் ஆகி மன்றத்து அஃதே - வெண்பூதி குறு 97 "தோழி! யான் இவ் இடத்தில் உள்ளேன் என் பெண்மை நலனோ என்னிடத்திலிருந்து நீங்கி வருத்தத்தோடு கடற் கரைச் சோலையிடத்து உள்ளது. தலைவனோ தனது ஊரினிடத்து உள்ளான், எம்மிடையே உள்ள மறைமுக நட்பானது பலரறியும் பழிமொழியாகி ஊர்பொது விடத் திற்கு வந்தாயிற்று” எனறாள் தோழியிடம் தலைவி

108. அறவோர் அல்லர் அவர் உள்ளின், உள்ளம் வேமே உள்ளாது இருப்பின், எம் அளவைத்து அன்றே வருத்தி வான் தோய்வற்றே, காமம்; சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.

- ஒளவையார் குறு 102 "தோழி! தலைவரை நினைத்தால் அவர் பிரிவை எண்ணி எம் உள்ளம் வெந்து நிற்கும்; நினையாமல் இருப்போ மாயின் அவ்வாறு இருத்தல் எம் ஆற்றலுக்கு உட்பட்ட தன்று, காம நோயின் வருத்தமானது வானத்தைத் தொடும் அளவினதாக உள்ளது எம்மால் மருவப்பட்ட தலைவரோ சால்புடையவரல்லர்” என்று தலைவி தோழிக்கு வருந்தி ஆற்றாது உரைத்தாள்.

109. நான் இறப்பேன் போலும் கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், கவிர் இதழ் அன்ன தூவிச் செவ் வாய், இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் வாரார் போல்வர், நம் காதலர்; வாழேன் போல்வல் - தோழி - யானே.

- வாயிலான் தேவன் குறு 103