பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"தோழி, மிகுந்த நீரினால் தொகுக்கப்பட்ட நடுங்குவ தற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து, மீனாகிய இரையைத் தேடித் திரியும் முள்முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகினையும், சிவந்த அழகை யும் உடைய நாரைக்குத் துன்பம் உண்டாகும்படி, தூவுகின்ற நீர்த் துளிகளை யுடைய, பிரிந்தார் துயர் கூர்தற்குக் காரண மாகிய வாடைக் காற்று வீசும் கூதிர்க் காலத்திலும் பிரிந்து சென்ற நம்முடைய தலைவர் வாரார் அல்லர், யானும் வாழ்வேன் அல்லேன்” என்று தலைவன் குறித்த காலத்து வராமையால் தலைவி வருந்தி கூறினாள்

110. நெற்றி அழகு மாறியதேன்? முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை புணரி இகுதிரை தரூஉம் துறைவன் புணரிய இருந்த ஞான்றும், இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!

- நம்பி குட்டுவன் குறு 109 வளைந்த கால்களையும் சுருண்ட முதுகையும் உடைய இறால் மீனின் பெரிய இனத்தைக் கடலில் தவழும் அலை யானது கொண்டு வந்து தருதற்கு இடமாகிய துறையை உடைய தலைவன், புணரும் பொருட்டாகக் குறியிடம் வந்த பொழுதும் நினது நல்ல நெற்றியின் அழகு பிறர் அலர் கூறும் தன்மையால் இத் தன்மையது ஆயிற்று இஃது இரங்குதற்குரியது," என்று தலைவன் கேட்கும்படி தோழி ஊரலரைத் தலைவியிடம் கூறினாள்.

11. நாரை என்மகள் நெற்றியை மிதிக்கும் நெய்தல் பரப்பில் பாவை கியப்பி, நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க - செல்கம்; செலவியங்கொண்மோ - அல்கலும், ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும், என் மகள் நுதலே. - பொன்னாகன் குறு 14 “இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ! நெய்தல் நிலத்தில் எனது பாவையைக் கிடத்திவிட்டு நீ இருக்கும் இடத்திற்கு