பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

55


“கடலே! பூழி நாட்டாரது சிறிய தலையை உடைய வெள்ளாட்டின் தொகுதி பரவினாற் போன்ற மீனை உண்ணும் கொக்குகளை உடைய சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து, வெள்ளிய பூவை உடைய தாழைகளை அலைகள் அலைகின்ற நள் இரவிலும் நினது ஆரவாரம் கேட்கும். நீ யாரால் வருத்தமடைந்தாய்?" என்று தலை வனைப் பிரிந்த தலைவி வருத்தமுடன் வினாவினாள்.

120. தனிமை வருத்தம் தருகிறது தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மாந்தை ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

- கூடலூர் கிழார் குறு 166 "குளிர்ந்த கடலிடத்து உண்டாகும் அலைகள் மீன் களைப் பெயரச் செய்வதனால் வெள்ளிய சிறகுகளை உடைய நாரை வரிசையின் நீங்கி அயிரை மீனை உண்ணு தற்கு இடமாகிய மாந்தை என்னும் ஊர்த் தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையுடையது; தலைவனைப் பிரிந்து தனியே தீங்குவோமாயின் வருத்தத்தைத் தருவதற்குக் காரண மாகின்றது” என்று காப்பு மிகுதிக் கண் தோழி தலைவியிடம் கூறினாள்.

121. பெரிதும் வருந்துகிறது மனம்

தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல் பழுமரம் படரும் பையுள் மாலை, எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் தமியர் ஆக இனியர் கொல்லோ? ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஒர் ஊர் யாத்த உலை வாங்கு மிதி தோல் போலத் தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.

- கச்சிப்பேட்டு நன்னாகையார் குறு 172 தோழியே, வலிமை உடைய அழகிய சிறகையும் மென்மை யாகப் பறத்தலையும் உடைய வெளவால்கள் பழுத்த மரங்