பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


களை நினைத்துச் செல்லும், தனியாய் இருப்பவருக்குத் துன்பத்தைச் செய்யும் மாலைக்காலத்தே, யாம் தமியேம் ஆகும்படியாக ஈங்கு எமை வைத்துப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக உடையவராதலால் இனிமை கொண்டவராக இருப்பரோ? என் நெஞ்சு ஏழு ஊரிலுள்ளோர்க்குப் பொது வாகிய தொழிலின் பொருட்டு ஓர் ஊரின்கண் அமைந்த உலையில் செறித்த துருத்தியைப் போல எல்லையில்லாத வருத்தத்தை அடையும்” என்று தோழியிடம் தலைவி துடித்துக் கூறினாள்.

122. வருத்தப் போவதில்லை நான்

பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி, உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன் - தோழி சங்கு என்கொல் - என்று, பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?

- உலோச்சன் குறு 175 "தோழி, செவ்வியை உடைய தேனை விரும்பிப் பறத் தலைச் சேர்ந்த பல வண்டுக் கூட்டங்கள், அலைகள் மோதிய செறிந்த மணல் கரையிடத்துள்ள அரும்புகள் நிறைந்த புன்னை மரத்தினது பெரிய கிளையினிடத்து வந்து கூடுகின்ற மலர்ந்த மலர்களையும் கரிய நீரையும் உடைய கடற்கரைத் தலைவன் பொருட்டு வருந்தினேன் அல்லேன்; இவ் இடத்தில் இவள்தான்் ஏன் இங்ங்னம் ஆயினள் என்று பிறர் பிறர் அறியும்படி கூறுதல் அவர்களுடைய மனம் போனபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல் எனக்கு என்ன துன்பத்தைச் செய்து விடும்?” என்று தலைவி கூறினாள்.

123. நீ வருந்தாதே கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,

துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே, மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை