பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

57


அன்றிலும் பையென நரலும், இன்று அவர் வருவார்கொல் வாழி - தோழி - நாம் நகப் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அருங் காமம் தண்டியோரே?

- உலோச்சன் குறு 177 "தோழியே கடலானது ஒலியடங்க, கடற்கரைச் சோலை இருளால் மயக்கத்தை உடையதாக, துறையையும் நீரையும் உடைய கரிய உப்பங்கழி பூக்கள் குவிந்ததனால் பொலிவிழந்து மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது மடலின் கண்ணே பொருந்தி வாழும் வாழ்க்கையை உடைய அன்றிற் பறவையும் மெல்லக் கூவும், முன்பு நம், தம்மைப் புலந்து கூறினாலும், தாம் அவ் இடத்து அஞ்சி நீங்குதற்கரிய காம இன்பத்தைப்பெற்றவராகிய தலைவர் இன்று வருவார்” என்று தோழி தலைவிக்கு வருந்தாதிருக்கக் கூறினாள். 124. விழி வலையில் வீழ்வர்

அறிகளி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; குறுகல் ஒம்புமின் சிறுகுடிச் செலவே, - இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, ஆண்டு ஒழிந்தன்றே, மாண்தகை நெஞ்சம் - மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை நுண் வலைப் பரதவர் மட மகள் கண் வலைப் படுஉம் காணலோனே.

- ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் குறுந் 134 “மயிற்பீலியின் கண்ணை ஒத்த மாட்சிமைப்பட்ட கூந்தலைப் பெற்ற பாவை போல்பவளாகிய, நுண்ணிய வளையையுடைய நெய்தல் நில மாக்களாகிய பரதவரின் மடப்பம் பொருந்திய மகளது, கண் வலையின் கண் ஆங்கு செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, எனது மாட்சிமைப்பட்ட தகுதியை உடைய நெஞ்சம், இப் பொருளுக்கு இது சிறந்தது என்று ஆய்ந்து தெளியாமல், அக் கண் வலையினிடத்துச் சிக்கி அக் கானலிடத்துத் தங்கியது. அறிவால் சிறந்த சான்றோரிடம் தாம் கண்டறிந்த ஒன்றை மறைத்துப் பொய்கூறும் இயல்பு இல்லை ஆதலின்