பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

59


கார் காலத்தை ஏற்றுக் கொண்டு கிளைத்த மழையையும் ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு மிக மயங்கிக் கலந்த கூதிர் காலமாகிய உருவத்தையும் உடைய கூற்றம், தலைவரைப் பிரிந்திருக்கும் என்னைக் கொல்லுதல் குறித்து வந்தது யாது செய்வோம்?” என வருந்தினாள் தலைவி.

127. பசலை படர்ந்தது மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக், கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப, இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன், யாங்கு அறிந்தன்றுகொல் - தோழி! - என் தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

  • - உலோச்சன் குறு 205 "தோழியே! அலைகள் கொண்டு வந்து இட்ட மணலை உடைய கடற்கரைத் தலைவன் மின்னலைச் செய்கின்ற தொகுதியையுடைய பெய்தலை உடைய முகில் பெய்யத் தொடங்க வானத்தில் அசைந்து செல்லும் அன்னப்பறவை - பறத்தலில் உயர்ந்து சென்றது போலப் பொற்படைகளாலே பொலிவுபெற்ற வெள்ளிய தேரின்கண் ஏறி கலங்கிய கடலில் உள்ள நீர்த்துளிகள் தேர் சகடத்தை நனைக்கும்படியாக இப்பொழுது பிரிந்து சென்றான். பசலையானது இதனை எப்படி அறிந்தது? எனது மணம் கமழுகின்ற அழகிய நெற்றி யிடத்து அது உடன் படர்ந்துள்ளதே!” என வருந்தினாள் தோழியிடம் தலைவி

128. தேர் வந்து வீணே சென்றது

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்

தெண் கடல் அடைகரைத் தெளிர்மணி ஒலிப்பக்,

காண வந்து, நாணப் பெயரும் ;

அளிதோ தான்ே, காமம்;

விளிவதுமன்ற நோகோ யானே.

- நெய்தற் கார்க்கியன் குறு 212