பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தோழியே நம் “தலைவன் ஏறிச் சென்ற கொடுஞ்சியை உடைய உயர்ந்த தேரானது, தெள்ளிய நீரை உடைய கடற் கரையினிடத்துத் தெளிந்த ஓசையுடைய மணி ஒலிக்கும் படி, நாம் காணும்படியாக வந்து, பின்பு நாம் நானும்படி மீண்டு செல்லும் காமம் இரங்கத்தக்கது. அது உறுதியாக அழிதற் குரியது; அதனால் யான் வருந்துகின்றேன்” என்று குறை நயப்பத் தோழி கூறினாள்.

129. இதுவே தக்க நேரம் பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே, செறிவும் சேண் இகந்தன்றே அறிவே, ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே, வல்லா கூறியிருக்கும், அள் இலைத் தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு இடம்மன் - தோழி - எந் நீரிரோ எனினே.

- வெள்ளுர்கிழார் மகனார் வெண்பூதியார் குறு 219 "தோழி! பசலையானது என் மேனியிடத்து உள்ளது என் காதலோ அவன் அன்பற்ற நெஞ்சத்திலேயே தங்கியுள்ளது எனது அடக்கமும் என்னை விட்டு நெடுந்துரத்திற்கு நீங்கிச் சென்றது எனது அறிவோ தலைவர் உள்ள இடத்திற்கே செல்லத் துண்டுகிறது என்று நம்மால் செய்ய இயலாத ஒன்றைச் சொல்லி இங்கே தங்கியிருக்கும் முட்கள் பொருந்திய இலைகளையும் பருத்த அடிமரத்தையும் கொண்ட தாழை மரங்களை உடைய கடற்கரைத் தலைவன், நீர் எந் நிலையில் உள்ளிரோ எனக் கேட்டு என் குறை தீர்ப் பாராயின் அதுவே என் குறை சொல்வதற்குத் தக்க செவ்வி யாகும்” என்றாள் சிறைப்புறத் தலைவி.

130. நலன்களை எல்லாம் இழந்தேன்

பூவொடு புரையும் கண்ணும், வேய் என விறல் வனப்பு எய்திய தோளும், பிறை என மதிமயக்குறுஉம் நுதலும், நன்றும் நல்லமன்; வாழி - தோழி - அல்கலும்