பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே

- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் குறு 228

"தோழி! நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் சேய்மையில் உள்ள நாட்டில் இருப்பராயினும், அவர் நெஞ்சுக்கு அணிய ராய் உள்ளார். அவருடைய தண்ணிய கடலை உடைய நாட்டினிடத்து விழுதுகள் தாழ்ந்து காணப்படும். தாழை யினது முதிர்ந்த கொழுவிய அரும்பு, நாரைகள் கோதுகின்ற சிறகினைப் போல இதழ்கள் மலர்கின்ற கடற்சோலைகள் பொருந்திய சிற்றுாரின் முன்னிடத்தில் அலைகள் வந்து மீண்டு செல்லும்” என்றாள் தலைவி.

133. வந்தவன் வராது இருந்தான்் அம்ம வாழி, தோழி கொண்கன் - தான்் அது துனிகுவன் அல்லன், யான் என் பேதைமையால் பெருந் தகை கெழுமி, நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ? - வயச் சுறா வழங்கு நீர் அத்தம் தவச் சில் நாளினன் வரவு அறியானே.

- அறிவுடை நம்பி குறு 230 "தோழியே, ஒன்று கூறுவேன் கேட்பாயாக: தலைவன் வலிமை கொண்ட சுறா மீன்கள் உலாவுகின்ற நீரையுடைய வழியிலே, சில நாள்களாக முன்போல வந்து கொண்டிருந்த வரவினை அறியாதவனாயினான். அங்ங்னம் வாராது இருத்தலைத் தான்ாகத், துணிந்து நடக்கும் இயல்புடையவன் அல்லன். யான், என் அறிவின்மையால் பெரிய உரிமையைப் பொருத்தி அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்த செயல் ஒன்றை உடையேனோ?” என்று தலைவனிடம் குறை நயப்பித்துக் கூறினாள் தோழி.

134. பெண்மை நலனைத் தந்து செல்க

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ! - குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை