பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

65


138. அண்மையில் திருமணம் நிகழும் அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி, ஈங்கு ஆகின்றே - தோழி, - கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர, நெடும் பனை குறிய ஆகும் துறைவனைப் பெரிய கூறி, யாய் அறிந்தனளே. - உலோச்சன் குறு 248 "தோழியே, கடற்கரைச் சோலையினிடத்தில் உள்ள அசைகின்ற அடியிடம் புதையும்படி மேல் காற்றுக் கொண்டு வந்து இட்ட அடுப்பங்கொடி படர்ந்த மணல் குவியல் பரவ, நெடிய பனை மரங்கள் குறியனவாகத் தோன்றும், கடற் கரையை உடைய தலைவனை, முருகனென்று சொல்லி வெறி யெடுத்து நம் தாய் அறிந்து கொண்டாள். ஆதலின் மனத்துக் குரிய நாள் வாராமற் போவதென்பது அரிதாகும்; மணம் நேரும் அவனது மார்பை அடைக என்று வரையறுத்த நாள் அணிமையாக வந்தும் இப்படி நின்பால் ஆற்றாமை உண்டாகிறது, இஃது என்கொல்?” என்று தோழி தலைவி யிடம் வினவினாள்

139. ஈங்கு இல்லை எந்தையும் தாயும் சேயாறு சென்று, துணைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல - வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு, 'இனிவரின் எளியள் என்னும் துதே.

- கல்லாடனார் குறு 269 "தோழியே, என் தந்தையும் வலிமையுடைய சுறாமீன் தாக்கியதினால் உண்டான புண் ஆறி மீண்டும் மீன் வேட்டைக்காக, நீல நிறமுடைய பெரிய கடலினிடத்துப்