பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


புகுந்தனன் என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு உப்பு விளையும் களத்திற்குச் சென்றாள் அதனால் குளிர்ச்சியுடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய தலைவனுக்கு இப்பொழுது இங்கே வந்தால் தலைவியை எளிதில் கண்டு பெறுதற்கு உரியள் என்றும் தூதுமொழியை நெடுந்துார வழியைக் கடந்து போய் விரையும் நடையினால் வருந்தாமல் கூறி அருந்துணை ஆவாரைப் பெற்றால் மிக நல்லதாகும் இஃது என் விருப்ப மாகும்” என்று ஒரு பக்கம் இருந்த தலைவன் கேட்பத் தோழியிடம் கூறினாள் தலைவி.

140. பாறையில் மோதும் சிறுநுரை 'காமம் தாங்குமதி'என்போர்தாம் அஃது அறியலர்கொல்லோ? அனை மதுகையர்கொல்? யாம், எம் காதலர்க் காணேம்ஆயின், செறிதுணி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் கல் பொரு சிறுநுரை போல, மெல்லமெல்ல இல்லாகுதுமே.

- கல்பொரு சிறுதுரையார் குறு 290 "தோழி, காம நோயைப் பொறுத்து ஆற்றுவாயாக என்று சொல்பவர் தாம் அக் காமத்தின் தன்மையை அறிந்தி லரோ? அத்துணை வன்மை உடையவரோ? யாம் என் தலைவரைக் காணாததனால் செறிந்த துயர் மிக்க நெஞ்சத் தோடு, மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதிச் சிதறும் சிறிய துரையைப் போல, மெல்ல மெல்ல இல்லேம் ஆயினோம்” என்றாள் வற்புறுத்தும் தோழியிடம் தலைவி.

141. காரணமானவன் தலைவனே!

கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், தொடலை ஆயமொடு தழுஉஅணி அயர்ந்தும், நொதுமலர் போலக் கதுமென வந்து, முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே; துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்