பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

69


“மீனை உணவாகப் பெறும் பொருட்டுக் கழியின் நீரை ஆராய்ந்து அங்குத் தங்கி இருக்கும் கரிய காலை உடைய வெண்ணிற நாரைகள், அடைகரையில் உள்ள தாழை யினிடத்துக் கூடியிருக்கும் பெரிய கடலின் கரையை மோதி உடைக்கின்ற அலைகளின் ஒசையினால் துயில்கின்ற துறையை உடைய தலைவனே, மின்னுகின்ற பூங்கொத்துகளை உடைய புன்னை மரத்தினது அழகிய புள்ளிகளைப் பெற்ற நிழலில் பொன் போன்ற கோடுகளைக் கொண்ட நண்டுகளை, அலைத்து விளையாடிய பொழுது என் தோழியாகிய தலைவி தன் பழைய செறிந்த நிலையினின்றும் நெகிழ்ந்த வளைகளை உற்றவளாகி இங்கே மிகச் பசந்தாள்” என்று தோழி தலை வனுக்குத் தலைவியின் நிலை உரைத்தாள்.

145. பகையாயிற்று நட்பு கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் கொடுந் திமில் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து வெண் தோடு இரியும் வீததை கானல், கைதைஅம் தண் புனல் சேர்ப்பனொடு செய்தனெம்மன்ற, ஒர் பகைதரு நட்பே.

- கணக்காயன் தத்தன் குறு 304 "தோழி: கொல்லும் தொழிலில் பொலிவு பெற்ற கரிய முகத்தை உடைய எறிகின்ற உளியைத் தன்னுடைய முகத்தின்கண் அமையும்படி பொருந்தப்பெற்ற உலர்ந்த மூங்கிலின் வலிய காம்பைத் தாங்குதற்குரிய நீரையுடை வழியின் கண் எறிந்து கைக்கொள்ளும் வேகத்தையுடைய வளைந்த மீன் படகை உடைய பரதவர், கொம்பை உடைய சுறாமீனை நோக்கி எறி உளியை எறிய, அது கண்டு நீண்ட கரையினிடத்தே இருந்த குறிய கால்களை உடைய அன்னப் பறவைகளின் வெண்ணிறக் கூட்டம், அஞ்சி ஒடும் மலர்கள் நெருங்கிய சோலையையும் தாழையையும் அழகிய தண்ணிய நீரையும் உடைய கடற்கரைத் தலைவனோடு நிச்சயமாக