பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; T1

வளர்ந்த குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவருக்கு உரைப்பாரைப் பெற்றால் இனிமேலும் உயிரோடு இருப்பே னாவேன்” என்றாள் தலைவி

148. தடுக்க முடியாது அவரை அலர் யாங்கு ஒழிவ - தோழி! - பெருங் கடல் புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும், நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர் யான் கண்டனனோஇலனோ, பானாள் ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் தாது சேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?

- சேந்தன் கீரனார் குறு 311 "தோழி! பெரிய கடலினது புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையின் கண்ணே, பாகன் தடுக்கவும் நில்லாமல் சென்ற 'கல்’லென்று ஆராவரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை நான் கண்டேனோ இல்லையோ நடு இரவின்கண் உயர்ச்சியை உடைய வெள்ளிய மணலிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது மகரந்தம் சேர்ந்த ஒளியை உடைய மலர்களைப் பறிக்கும் ஆய மகளிர் கூட்டமெல்லாம் ஒருங்கே கண்ட்து. இங்கனமாக, எவ்வாறு பழிமொழி இல்லாமல் போகும்” என்றாள் தலைவி.

149. நட்பு அவிழ்த்தற்கு அரிது பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு யாத்தேம், யாத்தன்று நட்பே; அவிழ்த்தற்கு அளிது; அது முடிந்து அமைந்தன்றே.

- ஆசிரியர் ? குறு 313 "தோழியே பெரிய கடற்கரையின் கண்ணதாகிய சிறிய வெண்ணிறக் காக்கையானது வெள்ளநீரை உடைய கரிய கழியிடத்து மீனாகிய இரையைத் தேடி உண்டு, மலர்கள் மணம் வீசும் சோலையினிடத்துத் தங்கும் துறையை உடைய