பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தலைவனோடு, நம்ம்ைப் பிணித்துக் கொண்டோம். அங்ங்னம் கூடிய நட்பு நன்றாகப் பொருந்தியது. அது பிறரால் பிரித தற்கு அரியதாக அமைந்தது” என்றாள் தலைவி தோழியிடம்.

150. சொல் வேறுபட்டானே

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின், உளெனோ வாழி தோழி விளியாது உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை ஒரை மகளிர் ஒராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் துன்புறு துனைபளி ஒங்கு வரல் விரிதிரை களையும் துறைவன் கொல்லோ பிற ஆயினவே.

- தும்பிசேர் கீரனார் குறு 316 "தோழியே, முழுவதும் கெட்டுப் போகாமல் வலிமையை உடைய கடலால் அலைக்கப்பட்ட மணல் விராவிய அடை கரையினிடத்து விளையாட்டை உடைய பெண்கள் ஒரு தன்மையாக அலைக்க, அதனால் மெலிந்த நண்டினுடைய வருத்தம் மிக்க விரைந்த செலவை உயர்ந்து வருதலுடைய விரிந்த கடல் அலையானது அந் நண்டைக் கொண்டு நீக்கு கின்ற துறையை உடைய தலைவன் சொல் வேறுபாடு உடைய வனாயினான். அழகிய வளைகள் நெகிழ்ந்து போகவும், அயர்வினை மெய்யின்கண்ணே நிலைக்கச் செய்யவும் ஆன துன்பமிக்க எனது வருத்தத்தைத் தாய் அறிவாளாயின் இனி மேலும் உயிரோடு இருப்பேனோ?” என்று வினாவினாள் தலைவி.

151. சொல்லைக் காப்பது கடமை

எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின் நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்