பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

75


"தோழி! செல்வேம் செல்வேம் என்று தலைவன் பல காலும் சொல்லியதனால் முன்பு அவன் கூறிய பொய்ச் சொல்லாக எண்ணி என் பக்கத்தினின்றும் நீங்கி நிலையாய்ப் போய்விடுக என்றேன். அய்யோ! நமக்குப் பற்றுக் கோடாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ? என் முலைகளின் இடையே உள்ள இடம் அவனது பிரிவால் அழுத என் கண்ணிரால் நிறைந்து கரிய காலை உடைய வெண்ணிற நாரை மீன் கவரக் கருதி மேவும் பெரிய குளம்போல ஆயிற்றே" என்று ஆற்றாத தலைவி வருந்திக் கூறினாள்

155. பிரியவே கூடாது துணைத்த கோதைப் பணைப் பெருந்தோளினர் கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த சிறு மனைப் புணர்ந்த நட்பே தோழி, ஒரு நாள் துறைவன் துறப்பின், பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே. - ஆசிரியர் ? குறு 326 "தோழி, கட்டிய மாலையை அணிந்த மூங்கிலைப் போன்ற பருத்த தோள்களை உடையவராய், கடலில் நீர் விளையாடலைச் செய்யும் மகளிர் கடற்கரைச் சோலையிலே செய்த சிற்றிலினிடத்தே யாம் தலைவனோடு பொருந்திய நட்பு, அத் தலைவன் ஒரு நாள் நம்மைப் பிரிந்தால் பல நாளில் வருகின்ற துன்பத்தை உடையது” என்று தோழியிடம் கூறினாள் தலைவி.

156. தூற்றல் நன்மையே தரும் சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி அலவன் சிறு மனை சிதையப் புணரி குணில் வாய் முரசின் இரங்கும் துறைவள் நல்கிய நாள் தவச் சிலவே, அலரே, வில் கெழு தான்ை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப், பாணர் புலி நோக்கு உறழ் நிலை கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

- பரணர் குறு 328