பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


“சிறிய மலரை உடைய ஞாழல் மரத்தின் வேரின்கண் அமைக்கப்பட்ட வளையிடத்திலுள்ள நண்டினது சிறிய வீடு அழியும்படி அலைகள் குறுந்தடி வாய்ந்த முரசத்தைப் போல வீசி முழங்கும் கடற்கரைத் துறையை உடைய தலைவன் தண்ணளி செய்த நாள்கள் மிகச் சிலவே ஆகும். அதனால் எழுந்த பழிமொழியோ, விற்படையைக் கொண்ட படை களுடைய விச்சியர்களுக்குத் தலைவன் பிற அரசர்களோடு போர் செய்த காலத்தில், புலியினது பார்வையை ஒத்துக் காணப்பட்ட பாணர்களின் பார்வையைக் கண்ட ஆரவார மிக்க குறும்பூரினர் செய்த முழக்கத்திலும் பெரிய முழக்கத் தினை உடையதாயிற்று” என்று மணநாள் நீள்வதறிந்து தலைவியை நோக்கித் தோழி கூறினாள்.

157. நம் உயிரும் பிரிந்துவிடும் சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்பப், பணி புலந்து உறையும் பல் பூங் கானல் இரு நீர்ச் சேர்ப்ப நீப்பின், ஒரு நம் இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று எவனோ - தோழி! - நாம் இழப்பதுவே.

- இளம்பூதனார் குறு 334 "தோழியே, சிறிய வெண்ணிறக் காக்கையினது செவ்விய வாயை உடைய பெரிய தொகுதி, வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தன் ஈரமாகிய புறத்தை நனைக்க அக் குளிரை வெறுத்து தங்குவதற்கு இடமாகிய பல மலர்களை உடைய சோலையை உடைய அகன்ற கடற்கரைத் தலைவன் பிரிந்தால், நாம் இழக்கும் பொருள் நமது இனிய உயிரே அன்றி வேறு ஒன்று யாது?’ என்று தலைவி தோழியிடம் வருந்திக் கூறினாள்.

158. அவர் இருந்த நெஞ்சு காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,