பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

77


அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஒதம் பெயர்தரப்பெயர்தந்தாங்கு, வருந்தும் - தோழி - அவர் இருந்த என் நெஞ்சே.

- அம்மூவன் குறு 340 "தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம் காம மிகுதியால் தலைவரை நினைத்துச் செல்லும் நாம் அவர் திறத்தே வருந்தினோமாயின் நம்மோடு நில்லாமல் ஒரு கூற்றிலே அமையாதாகி, அவ் இரண்டுக்கும் இடையிலேயும், கடற் கரைப் பரப்பிலே நின்ற மலரைப் பொருந்திய தாழை, கழி பெயருகின்ற இடத்தில் தளர்ந்து வெள்ளம் பெயரும் பொழுது தான்ும் பெயர்ந்தது போல வருந்தி நிற்கும்” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறினாள்.

159. வாழ்கிறேன் துணிந்து

பல் வீ பட்ட பசு நனைக் குரவம் பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் சினை இனிது ஆகிய காலையும், காதலர் பேணார் ஆயினும், பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என, வலியா நெஞ்சம் வலிப்ப, வாழ்வேன் - தோழி! - என் வன்கணானே.

- மிளைகிழான் நல்வேட்டன் குறு 341

"தோழி! பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளை உடைய குரா மரம், நெற்பொறியைப் போன்ற பூக்களை உடைய புன்க மரத்தோடு சோலையின்கண் அழகைக் கொண்டு கிளைகள் கண்ணுக்கு இனிதாக தோன்றிய இப் பருவத்திலும் தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவராயினும், பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த ஆண்மைச் செயலை மீறிச் செல்லுதல் தகுவதன்று என்றெண்ணி, முன்னர்த் துணியாத என் நெஞ்சம் பின்னர் துணிந்த தறு கண்மையால், உயிரோடு வாழ்வேன் ஆயினேன்” என்றாள் தலைவி தோழியிடம்