பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ? то

இழந்த பெண்மை நலத்தை மீண்டும் பெறுவோம் என்று கூறுகின்றாய்; அங்ங்னமே கொள்வேம்; ஆயினும் தாம் உற்ற வறுமைத் துன்பத்திற்கு அஞ்சி, விரும்பி இரந்தவர்க்குக் கொடுத்துப் பிறகு அங்ங்னம் கொடுத்த அவற்றைத் தருக என்று சொல்வதைக் காட்டிலும், நமது இனிய உயிரை இழத்தல் இன்னாமையை உடையதோ? அன்று; ஆதலின் அதைக் கருதிலேன்” என்றாள் பக்கத்தில் உள்ள தலைவன் கேட்பத் தலைவி.

162. அலர் உரைக்கும் தன்மை

வளையோய் உவந்திசின் - விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்கூர் உகிர் வளித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு உரிமை செப்பினர் நமரே விரிஅலர்ப் புன்னை ஓங்கிய புலால்அம் சேரி இன் நகை ஆயத்தாரோடு இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே.

- அம்மூவன் குறு 351 "வளையை அணிந்தவளே, நம் சுற்றத்தார், விரைதலை யும் வளைந்த காலையும் உடைய வளையின்கண் வாழும் நண்டு தன் கூரிய நகத்தினால் கீறிய ஈரமான மணலை உடைய நீருள்ள வழியானது சிதையும்படி இழும்” என்னும் ஒசை உண்டாக இடியினது முழக்கத்தை உடைய அலைகள் உடையும் துறையை உடைய தலைவருக்கு நீ உரிமை உடை யாய் என்பதனை உடன்பட்டுக் கூறினர். அதனை அறிந்து நான் மகிழ்ந்தேன். விரிந்த மலர்களை உடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலால் நாற்றத்தை உற்ற சேரி இடத்துள்ள இனிய நகையைப் பெற்ற மகளிர் கூட்டத்தின ரோடு இந்த ஆரவாரத்தை உடைய ஊர் இனியும் அலர் கூறும் அத் தன்மையை கொண்டதோ?” என்று தோழி தலைவிக்குக் கூறினாள்