பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


163. பழிச்சொல் அதிகமாகியது

பனை தலைக் “கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாய கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் கணம்கொள் சிமைய அணங்கும் கானல், ஆழி தலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக் கூழை பெய் எக்கர்க் குழிஇய பதுக்கைப் புலர் பதம் கொள்ள அளவை, அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

- விற்றுாற்று மூதெயினனார் குறு 372 “பனையின் உச்சியிலுள்ள கருக்கை உடைய நெடிய மடலானது குருத்தோடு மறைய, விரைவை உடைய காற்று ஒதுக்கிய உயர்ந்த வெள்ளிய மணற் குவியலாகிய தொகுதியைக் கொண்ட சிகரத்தை உடைய வருந்துகின்ற கடற்கரையில், கடல் வீசிய கருமணல்; சேற்றை உடைய அருவியால் கூந்தல் போன்ற தோற்றமுடைய கருமணல் குவியல்கள்; உலரும் செவ்வியை அடைவதற்கு முன் இந்த ஆரவாரத்தை உடைய ஊரில் பழிமொழி எழுந்ததுதே' என்றாள் தோழி, தலைவிக்கு மறைந்து நிற்கும் தலைவன் கேட்கும் வண்ணம்.

164. தன்மை வெம்மை கொண்டவள்

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில் சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, வேனிலானே தண்ணியள்; பணியே, வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, அலங்கு வெயில் பொதிந்த தாமரை உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

- படுமரத்து மோசிக் கொற்றன் குறு 376 "நெஞ்சமே! நிலைபெற்ற உயிர் தொகுதியினரால் முற்ற அறியப்படாததும் அணுகுதற்கரியதும் ஆன பொதிய மலை யில் உள்ள தெய்வங்களை உடைய பக்கத்தில் வளர்ந்த, சந்தனத்தைப் போல வேனிற் காலத்தில் இத் தலைவி