பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


"தோழியே, வெள்ளிய மணல் பரவிய செறிந்த சோலை யைக் கொண்ட தண்ணிய கடற்கரையை உடைய தலை வன் என்னைப் பிரியாத முன் காலத்தில், யான், தூய அணி கலன்களை அணிந்த மகளிர் விழாவுக்குரிய அலங்காரங் களைத் தொகுக்கின்ற மாலைக் காலத்தை அறிவேன். இப் பொழுது அது இல்லையாயிற்று அம் மாலைக் காலம் நிலம் பரந்தது போன்ற பெரிய துன்பத்தோடு தனிமை உடையதாதலை அப்போது யான் அறியேன்” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறினாள்.

167. நின்னை அன்றி இன்னல் தீர்ப்பார் யார்? நனை முதிர் ஞாழல் சினைமருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்தல் போல ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, அன்னாய் என்னும் குழவி போல, இன்னா செயினும், இனிது தலை அளிப்பினும், நின் வரைப்பினள், என் தோழி; தன் உறு விழுமம் களைளுரோ இலளே.

- அம்மூவன் குறு 397 “அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை நெய்தலது கரிய மலரிலே பெய்வது போலக் குளிர் காற்றுத் துரவுகின்ற வன்மையை உடைய கடற்கரைக்குத் தலைவர், தாய் சினத்து அடித்த பொழுதும், வாய் திறந்து 'அம்மா’ என்று அழும் குழந்தை யைப் போல, என் தோழியாகிய தலைவி நீ இன்னாதன வற்றைச் செய்தாலும் இனியதாகத் தலையளி செய்தாலும் நின்னால் புரக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; நின்னை யன்றி தனது மிக்க துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள்" என்று தலைவனை நோக்கித் தோழி கூறினாள்.

168. வியப்புக்குரிய காதல்! அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்