பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169. தலைவர் அழைத்துச் செல்வாரா? கானல் அம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇ, தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, அலரே அன்னை அறியின், இவண்உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு எனக் கூறின், கொண்டும் செல்வர்கொல் - தோழி, - உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிக், கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் மணல்மடுத்து உரறும் ஒசை கழனிக் கருங் கால் வெண் குருகு வெரூஉம் இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

- அம்மூவனார் நற் 4 "தோழி, கடற்கரையிலுள்ள அழகிய சிறுகுடியில் வாழும் பரதவர் கடல் மேற்சென்று மீன்பிடித்து வாழ்க்கை நடத்தும் இயல்பினர் நீலநிறப் புன்னை மரத்தின் கொழுவிய நிழலிலே தங்கியிருப்பர் அப்போது குளிர்ந்த பெரிய பரப்பை யுடைய கடலின் கொந்தளிப்பில்லாத நல்ல நேரத்தைப் பார்த்திருப்பர் அந் நேரத்தில் அழகிய கண்களையுடைய முறுக்குள்ள கயிற்றால் பின்னிய வலையை உலர்த்திக் கொண்டிருப்பர் அவ்வாறாய துறைவனிடம் "ஊரில் எழுந்த அலரை அன்னை அறிந்துவிட்டால் இங்கே வாழும் இன்ப