பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

85


வாழ்க்கை நமக்கு இல்லாமற் போகும்” என்று எடுத்துரைத் தால் அவர் நம்மை அழைத்துக் கொண்டு சென்றாலும் செல்வார் உப்பு வணிகர் வெண்கல் போன்ற உப்பை விலை பேசிப் பெறுவர் தம் நீண்ட தொடர் வண்டிகளில் படுத்தி ருக்கும் கூட்டமான ஆநிரையை விலக்க ஓசை எழுப்புவர். மணல் வழியில் செலுத்தி முழக்கமிடுவர் இந்த ஒசைகளை வயல் களிலிருக்கும் கரிய கால் வெள்ளை நாரைகள் கேட்டு அஞ்சும் அவ்வாறாய கடற்கரையிலிருக்கும் தாம் வாழும் ஊர்க்கே நம்மை அழைத்துச் செல்வரோ” என்ற ஐயத்தைத் தோழி தலைவியிடம் எழுப்பி உரைத்தாள்

170. கண்ணிர் சிந்தினள்!

பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை, அவர்செய் குறி பிழைப்ப; உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக. மாள, நின் செஞ்சத்தான்ே, புணரி பொருத பூ மணல் அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஒம்பி, வலவன் வள்பு ஆய்ந்து ஊர, நிலவு விரிந்தன்றால், கானலானே. - உலோச்சனார் நற் 11 “தலைவியே, தலைவர் செய்த இரவுக்குறி தவறிப் போக, அணியாமலிருந்த பூமாலை போல நீ உடல் மெலிந்தாய் நம் அயலார், "உறுதியாக அவர் வாரார்” என்று சொன்ன உரையை நினைத்து உனது நெஞ்சத்தில் வெறுப்புக் கொள்ளு தலை விடுக. அலை மோதிய, இள மணல் பரந்த கரை யினையுடைய கடலின் பக்கத்தில் திரியும் நண்டுகள் தேர் ஆழியால் நசுங்கிப் போகாமல் பாதுகாத்துத் தேர்ப்பாகன் கடிவாள வாரைப் பிடித்துக் கவனித்து ஊர்ந்து வரக் கானலில் நிலவு விரிந்தது காண்பாயாக. எனவே அவர் வருவார்” என்று தலைவிக்கு விதித்த காவலால், தலைவனைத் தலைவி சந்திக்க முடியவில்லையே என்ற நிலையில் தோழி இவ்வாறு கூறினாள்.