பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


171. நாணமும் இழந்தோம் முழங்கு திரை கொழிஇய மூரி எக்கர், நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்பl பூவின் அன்ன நலம் புதிது உண்டு, நீ புணர்ந்தனையேம்.அன்மையின், யாமே நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, மாசு இல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்குச், சேணும் எம்மொடு வந்த நானும் விட்டேம், அலர்க, இவ் ஊரே!

- அறிவுடைநம்பி நற் 15 “முழங்கும் அலைகள் ஒன்று சேர்த்த பெரிய மணல் மேட்டில் நுண்ணிய ஆடையின் அசைவு போலக், கூட்ட மான மாலை வாடைக்காற்று துற்றும்படியான கடற்கரைத் தலைவனே, பூவையொத்த புதிய எம் நலத்தை நீ உண்டாய். ஆனால் நீ ஒன்றிய நட்புக் கொண்டாய் இல்லை யாம், நேர்மையான நெஞ்சத்தால் துயரத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறோம் குற்றமற்ற கற்புடைய பெண் ஒருத்தி தன் குழந்தையைப் பேய் கவர்ந்து கொண்டு போகக் கைவிட்டு இருப்பது போல் நெடுங்காலமாக எம்மோடு உள்ள நாணத்தையும் யாம் கைவிட்டு விடுகிறோம். இவ் ஊரில் அலர் பரவுவதாக யாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று தோழி தலைவனிடம், தலைவியை மணந்து கொள்ள காலம் கடத்தக் கூடாது என்று வலியுறுத்தினாள்

172. நாள் சில தாங்காள் - திரும்பு

இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல் சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, நல் மான் உளையின் வேறுபடத் தோன்றி, விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப இன மணி நெடுந் தேர் பாகன் இயக்கச்,