பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அலைகள் அழகுபடுத்திய வெண்மணல் நிறைந்த கரையில் உப்பங்கழி சூழ்ந்த சோலையில் விளையாடியது தவிர மறைத்து நாம் செய்தது ஒன்றுமில்லை. ஒரு கால் ஏதேனும் உண்டு எனின், அது வெளிப்பட்டுப் பிறர் அறிந்ததும் இல்லை. அப்படியிருக்க, பொய்கைதோறும் இறால் மீனைத் தின்னும் குருகுக் கூட்டம் ஒலிப்பச் சுறா மீன் கழி சேர்ந்த இடத்தில் திரண்ட தண்டு நீண்டு, நுண்ணிய பலவாகிய சிறிய பசிய இலைகளையுடைய நெய்தல், கண்போலப் பூத்திருப்பதைக் கண்டும், அன்னை நம்மை நோக்கி, “சென்று அவற்றைப் பறித்துச் சூடுக” என்று கூறாதவள் என்ன கருதியோ? தெரியவில்லையே” என்று தோழி தலைவிக்குக் கூறுவது போலத் தலைவனுக்குக் கூறினாள்.

174. அனைத்திலும் வெறுப்பே

மா இரும் பரப்பகம் துணிய நோக்கிச், சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை பாய் இரும் பனிக் கழி துழைஇப், பைங் கால் தான்் வீழ் பெடைக்குப் பயிரிடுஉ சுரக்கும் சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, யானும் இனையேன் - ஆயின், ஆனாது வேறு பல் நாட்டில் கால் தர வந்த பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு உலவுத் திரை ஒதம் வெரூஉம் உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

- நக்கீரர் நற் 31 “வேறு பல நாட்டிலிருந்து ஓயாமல் மரக்கலங்கள் காற்றால் செலுத்தப்பட்டு வந்து, பலவகைப் பண்டங்களும் இறங்கும் நிலாப்போன்ற மணற் பரப்பிலேயுள்ள நெடிய புன்னை மரக்கிளையிலிருக்கும் முதிர்ந்த கருவையுடைய வெள்ளையான குருகு, உலவும் அலைவெள்ளத்திற்கு அஞ்சும் படியான வலிய நீர்ப் பரப்பையுடைய சேர்ப்பனோடு நட்புக் கொள்வதற்கு முன்பு மிகப்பெரிய நீர்ப் பரப்பில் தெளிவாகப்