பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


என்னும் ஊர் போன்ற இவள் நலம் பண்டும் இவ்வாறே இருந்தது நீ காண்பாயாக பக்கத்திலிருந்து விலகிப் போகா மல் நீ தலையளி செய்தாலும், இவள்கண் பசந்தது. சிறிது நெகிழ்ந்த அழகின் மிகுதியோ? கள் உண்டார்க்குக் கள்ளின் களிப்பால் ஏற்படும் மயக்கம் போன்ற காமமோ? தெரிய வில்லை," என்று தலைவிக்கு மணமான மறுநாள் தோழியிடம் தலைவன் நன்கு செய்தனை' என்றபோது அவன் பண்பு பாராட்டிக் கூறுகிறாள் தோழி

176 வருந்தாது எவ்வாறு இருப்பேன்? வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப், பாட்டம் பொய்யாது பரதவர் பகர, இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் ஆர் கலி யாணர்த்து ஆயினும், தேர் கெழு மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் புலம்பு ஆகின்றே - தோழி, கலங்கு நீர்க் கழி சூழ் படப்பைக் காண்டவாயில், ஒலி காவோலை முள் மிடை வேலி, பெண்ணை இவரும் ஆங்கண் வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே.

- உலோச்சனார் நற் 38

"தோழி, கலங்கிய நீரையுடைய கழிகள் சூழ்ந்த கொல்லை களையுடைய தாழைத் துறையில் தழைத்து வளர்ந்த முற்றிய பனை ஒலையோடு முள்களையும் சேர்த்துக் கட்டிய வேலி யின் பக்கத்தில் பனை மரங்கள் வளர்ந்திருக்கும். அவ் இடத்தில் வெள்ளை நிறமான மணற் கொல்லைகளையுடைய ஆரவாரமிக்க நம் ஊரில், மீன் வேட்டை பொய்யாது, வலை வளம் சிறப்பாயுள்ளது முகில் பொய்யாது என்று பரதவர் பகர் கின்றனர் கரிய பனையின் இனிய கள்ளை உண்போர் மகிழ்கின்றனர். இவ்வாறு ஆரவார மிக்க புது வருவாயை யுடையதெனினும், தேர் மிக்க நெய்தல் நிலத் தலைவன் நம்மை விட்டுப் பிரியின் பொலிவிழந்தாற்போலக் காணப் பட்டு வருத்தம் தருகின்றது” என்று தலைவி வேதனையுடன் தோழிக்குக் கூறினாள்