பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

91


177. நீ அல்லன் எமக்கு ஏற்றவன்!

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி, நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே, நீயே, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி, இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும், செல நின்றிமோ! பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே- ஆசிரியர் ? நற் 45 "இவளோ, கடற்கரையை அடுத்துள்ள அழகிய சிறு குடியில் வாழும், நீலநிறப் பெருங்கடல். கலங்க அதன் உள்ளே புகுந்து மீன் வேட்டையாடும் பரதவர் மகள் ஆவாள். நீயோ, உயர்ந்த கொடியசையும் கடைத் தெருவுள்ள மூதூரில் வாழும் விரைந்த செலவினையுடைய தேருக்கு உரிய செல் வரின் அன்புமகன் ஆவாய். கொழுப்புடைய சுறாமீனை அறுத்த துண்டங்களை உலர்த்த வேண்டிக் கூட்டமான பறவைகளை ஒட்டும் எமக்கு உன்னால் நின்மை என்ன? யாம் புலால் நாறுவோம் நீ அகன்று நில் பெரு நீராகிய கடலுள் விளையும் பொருள்களை வைத்து வாழும் எம் சிறிய நல்ல வாழ்க்கை உம்மோடு பொருத்தமுடையதன்று. எம் மனோராகிய பரதவரில் செல்வர் மக்களும் உளர்.” எனத் தோழி இரு குடும்பத்திற்கும் உள்ள நிலையை எடுத்துக் கூறி விலக்கினாள்.

178. குற்றம் ஏதேனும் உள்ளதோ? படு திரை கொழிஇய பால் நிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே:

முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் படு புள் ஒப்பலின் பகல் மாய்ந்தன்றே: