பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


போலக் கோலால் அடிக்கப்படுவனவாகுக. யாவை எனின், உயர்ந்தெழும் அலைகளையுடைய கடலின் குளிர்ந்த துறை களைக் கொண்ட சேர்ப்பனது ஒடும் தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டிய குதிரைகள். வீரை வேண்மான் வெளியன் என்னும் தித்தனது முரசு முதலானவை ஒலிக்கவும், ஏற்றப் பட்ட வரிசையான விளக்குகள் போல வெண்மையான சங்குகள் ஒலிக்கவும் மாலைப் பொழுது வந்தது. நுண்ணிய பனித் துளிகள் உண்டாகச் செயலற்று வருந்துமாறு வந்த அம் மாலைப் பொழுதிலே உடல் சோர்ந்து வருந்திய மனத்தோடு யாம் திரும்பிச் செல்வோம்” என்று பகற்குறி முடிந்து செல்லும் தலைவனைத் தங்கிப் போகத் தோழி வேண்டினாள்.

181. இவ் ஊர் அறம் உடையதன்று

உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண், கல்லென் சேரிப் புலவல் புன்னை விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால், அறன் இல் அன்னை அருங்கடிப் படுப்பப், பசலை ஆகி விளிவது கொல்லோ - புள்உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி திரை தரு புணரியின் கழுஉம் மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?.

- உலோச்சனார் நற் 63 "பரந்த கடலில் வருந்திய பெரிய வலையையுடைய பரதவர் மிக்க மீன்களை உலர வைத்த புதிய மணற் பரப்பில், கல் என்னும் ஒலியையுடைய சேரியில், புலால் வீசும் இடத்தி லுள்ள புன்னை மரம் விழாக் காலத்து மணக்கும் விளங்குகிற பூங்கொத்துகள் அவிழ்ந்து சேர்ந்து கமழும் ஆரவாரமுள்ள ஊரே அறன் இல்லாதது அதனால் அறன் இல்லாத அன்னை அருங்காப்புச் செய்தாள் பறவை உட்கார ஒடிந்த தால் விழுந்த பூக்கள் கலந்த சேற்றின் குழம்பு, கழியாகிய