பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

95


வழியில் ஒடும் பெரிய கடிவாளக் காவலுள்ள குதிரைகளின் கால்களை அலைகள் தரும் கடலைப் போலக் கழுவும் அலை மலிந்த கடற் சேர்ப்பனொடு ஏற்பட்ட நம் நட்பு வருத்தமாக மாறிச் சாவது தான்ோ?” என அலர் அச்சத்தால் தோழி தனக்குத் தான்ே சொல்லிக் கொள்ளல் போல் பக்கத்தில் உள்ள தலைவனுக்கு உணர்த்தினாள்.

182. தங்கிச் செல்லின் குறை வருமோ?

சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் மால் வரை மறைய, துறை புலம்பின்றே; இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய கருங்கோட்டுப் புன்னை இறைகொண்டனவே, கணைக் கால் மா மலர் கரப்ப, மல்குகழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், தங்கின் எவனோ தெய்ய - பொங்கு பிசிர் முழுவு இசைப் புணரி எழுதரும் உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

- பேரி சாத்தனார் நற் 67 "சிவந்த வானில் ஏறிய செழுமையான கதிர்களையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைந்தது. கடற்றுறை தனிமை யாயிற்று. கரிய கால்களையுடைய வெண்குருகுகள் இறால் மீன்களைத் தின்று எழுந்தன. வெண்மையான உப்புக் குவட்டின் மேல் அருமையான தம் சிறகைக் கொண்டு பறந்தன. கரையிலிருந்த கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களில் போய்த் தங்கின. திரண்ட தண்டையுடைய சிறந்த நெய்தல் மலர் மறைய, நீர் நிறைந்த கழியிலே ஆனும் பெண்ணுமாகச் சுறா மீன்கள் திரிந்தாலும் திரியும். அப்போது, இரவில் ஒலிக்கும் குளிர்ந்த கடலில், நிறைந்த விளக்கைக் கைக் கொண்டு எம் சுற்றத்தாரும் மீன் வேட்டைக்குப் புகுந்தனர். அதனால் பொங்கும் நீர்த்துளிகளையும் முழவு போன்ற ஒலிகளையுமுடையது கடலலைகள் தோன்றும்