பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

97


184. நீ இங்கு வராதே! வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை இடிக் குரற் புணரிப் பெளவுத்து இடுமார், நிறையப் பெய்த அம்பி, காழோர் சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, 'ஏதிலாளனும் என்ப; போது அவிழ் புது மணற் கானல் புன்னை நுண் தாது, கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் கண்டல் வேலிய ஊர், அவன் பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலே அரிதே'

- உலோச்சனார் நற் 74 "திருத்தமாக ஒளிவிடும்படி திரிக்கப்பட்ட வன்மையான கயிற்றால் பின்னிய பெரிய வலை. அதை, இடிபோலக் குரல் எழுப்பும் அலைகளையுடைய கடலில் இடும்பொருட்டு, நிறைய ஏற்றப்பட்ட தோணியைப் பரதவர் கொண்டு செல்வர். குத்துக்கோலை உடையோர் பிணித்துச் செல்லும் அடக்குதற் கரிய களிற்றினைப் போலத் தோணியைக் கொண்டு செல்வர். சிறிய மலர் கொண்ட ஞாழல் மரங்களை யுடைய பெருங்கடற் சேர்ப்பனை ஏதிலாளன்’ ஆயினான் எனவும் கூறுவர். புதிய மணலைக் கொண்ட கானலிலுள்ள புன்னையின் மொட்டு அவிழ்ந்த துண்ணிய தாது, கொண்டல் என்னும் கீழைக்காற்று வீசுந்தோறும் குருகின் வெளிய முது கில் நெருங்கத் துர்க்கும். அவ்வாறாய தெளிந்த கடற்கரை யிலுள்ள கண்டல் என்னும் மரம் நிரம்பிய வேலையை யுடைய இவ் ஊர், அவன் பெண்டு, என அறிந்தது. அதை மாற்றல் யார்க்கும் அரிது. ஆகலினால் பாண, நீ ஈண்டு வாராதே" என்று தூதாக வந்த பாணனிடம் வாயில் மறுத்துச் சீறி விழுந்தாள் தலைவி.

185. துன்பத்தினின்றும் விடுபட்டோம் கோட் சுறா வழங்கும் வாள் கேழ் இருங் கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறையப்,