பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கலித் தொகையில் பரத்தையர் புனலாடலும், தலைவி ஊடலும், எங்கும் சுட்டப் பெறவில்லை. பரிபாடல் இதில் முதன்மை வகிக்கிறது. பரத்தை யர்கள் பெரும்பாலும் பார்பணத்திகளே என்பது என் ஆய்வின் முடிவு.

கலித் தொகை முல்லைத் திணையில் கொல்ஏறு அடக்குதல் வருகின்றது. ஆனால், பிற சங்க அகநூல்களில் மாடுபிடி போர் இல்லை. இது பிற்காலத் தமிழக வாழ்வில் இணைந்தது போலும். இந் நூலின் திணை வரிசைக்கேற்ப ஆய்வு செய்தால் பெருகும் என்பதனை விடுத்து, இத் தொகை - வகை உரை நூலை முறைப்படுத்துங்கால் என்னை இடையறாது ஆக்கப் பணிக்கு ஊக்குவித்த கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அவர்களுக்கும், ஆங்கில அறிஞர் திரு. சகதீசன் அவர்களுக்கும். என் மகன் சிற்பி கோ. வீரபாண்டியனுக்கும் வெளியீட்டாளர் திரு. வேலாயுதம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தமிழகம் இப் புதிய வார்ப்பினை ஏற்று பயனடையும் என்பது என் நம்பிக்கை.

சங்கத் தமிழ்ச்சான்றோர் நூற்றொகைத் தந்துவக்கத் தங்கத்தைத் தேடுதல்போல் தம்வாழ்வைத் தாமிழந்து செங்கதிராய்த் தென்தமிழ்ச் செல்வத்தை நாளிலத்தில் எங்கும் இருந்தமிழே உன்னால் இருந்தேன்.ஒ. தங்கும் உயிர் வானோர் விருந்தமிழ்தம் வேண்டேம்என இங்குழைத் தார்க்கெல்லாம் நன்றி இயம்பிடுவன் பொங்குகடல் வீறலை போல்.

அன்பன் த. கோவேந்தன்

காதலினால் உயிர் தோன்றும் - இங்குக் காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்; காதலினால் அறிவெய்தும் - இங்குக் காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்

செவ்விது, செவ்விது, பெண்மை - ஆ! செவ்விது செவ்விது செவ்விது காதல்

- பாரதி