பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பாயாக. ஆதலின், நீவிர் இருவரும் போதலை ஒழிமின்” என்று வழியில் கண்டோர் உடன் போக்குற்ற காதலர்க்கு அறிவுரை கூறினர்.

188. நாமும் செல்வோம் நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே, அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார் வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக் களையார் ஆயினும், கண் இனிது படிஇயர்; அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் அளிதோ தானே நாணே - ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!

- ஆசிரியர் ? குறு 395 “என் னெஞ்சம் நிலைநிறுத்தலைச் செய்ய இயலாது; அத் தலைவர் என்னிடம் அன்பு இல்லாத காரணமாக அருளைப் பொருளென்று கருதார் ஆயினார் வன்கண்மையை மேற் கொண்டு என்னை வற்புறுத்தி, அந்த வற்புறுத்தலினால் வன்மை பெற்றோராயினார். அரவினால் உண்ணப்படும் நிலவு திறந்து இவ் உலகத்தில் உள்ளோர் செயலற்றாற் போல எனது துன்பத்தை நீக்காராயினும் இனிமையாகக் கண்முடி துயிலுகின்றனர் அஞ்சற்க எனக் கூறித் தேற்றுவாரு மில்லை ஆதலின், அங்கே அத் தலைவர் தங்குமிடத்திற்கு நாம் நீங்கிச் சென்றால் நம் நாணம் இரங்கத்தக்கது. அது அழிந்து படுமே” என்று தலைவி தோழிக்குச் சொன்னாள்

189, எண்ணினளோ எளிதென? பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, எளிது என உணர்ந்தனள் கொல்லோ - முளி சினை ஒமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் மழை முழங்கு கடுங் குரல் ஒர்க்கும் கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?

- கமயனார் குறு 396