பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 99

“இனிய பாலையும் உண்ணாளாகி, பந்தாடுதலையும் விரும்பாளாகி, முன்பு தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இப்பொழுது, உலர்ந்த கிளைகளை உடைய ஒமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்பை உடைய ஆண் யானை வேனில் தன்மையை உடைய மலையினிடத்தில் உள்ள வெம்மையாகிய அடி வாரத்தில் முகில் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும் மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய வழியில் அத் தலைவனோடு உடன் செல்லுதல் எளிமை உடையது என்று அறிந்தாளோ? என்று செவிலித்தாய் வருந்தி உரைத்தாள்.

190. துயர் துடைப்பாரைக் காணேன் தேற்றாம் அன்றே - தோழி தண்ணெனத் தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, மெய்ம் மலி உவகையின் எழுதரு கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 398 "தோழியே! குளிர்ச்சி உண்டாகும்படி துவுகின்ற மழைத் துளியை உடைய துயரம் மிக்க பொழுதில் கயலை ஒத்த மை யுண்ட கண்களையும் கனத்த குழையையும் உடைய மகளிர் தம் கையையே கருவியாக நெய்யை வார்த்து விளக்கேற்றிய துயரத்தைத் தரும் மாலைக் காலத்தில் பெறுதற்கரிய தலைவர் வந்தாராக விருந்து செய்து உடம்பு பூரிக்கும் படியான மகிழ்ச்சியோடு, முன் எழுந்த கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியைத் துடைப்போர் யாரும் இல்லையே." என்றாள் ஆற்றாமை மீதுற்ற தலைவி

3R