பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191. வேண்டா இந்த வினையே அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, ஒலி வல் ஈந்தின் உலவை.அம் காட்டு, ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, வல்லியப் பெருந் தலைக் குவளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே, வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், காலொடு பட்ட மாளி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே'

- பெரும்பதுமனார் நற் 2 "நெடுங்காலம் வழங்கி வந்தது பெரிய குளிர்ந்தமலை, அதில் தழைத்த வலிய ஈந்து மரத்தின் கிளைகள் விளங்கும். அழகிய அக் காட்டு வழியில் நடந்து செல்லும் மக்களின் தலையைப் புலிக்குட்டிகள் மோதும். தலை சிவந்த மறுப் பட்டதலை குருதி படிந்ததுவாய் பெரியதலை இவற்றை யுடையனவாய் விளங்கும் மாலைக் காலத்தில் பதுங்கி யிருக்கும் ம்ரலின் துறுகளை நிமிர்ந்து நோக்கும் அங்கே இண்டங் கொடி படர்ந்திருக்கும் இங்கை மரமுள்ள காடு உள்ளது. அக் காட்டு வழியில், கூர்மையான பற்களைக் கொண்ட தலைமையுடைய மடந்தையை முன்னே நடக்கச்