பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 101

செய்து பின்னே நடந்து செல்கிறான் தலைவன். ஞாயிறு தோன்றி நிலம் தெளிந்த நேரத்தில் ஊரை விட்டு நீங்கிக் கொண்டிருக்கிறான், இந்தத் தலைவன் இவன் உள்ளம் கடியது; காற்றோடு சேர்ந்த மழையிடத்துத் தோன்றிய பெரிய மலையைப் புரட்டும் இடியைக் காட்டிலும் அது கொடியது” என்றார்கள் தலைவன் தலைவியைக் கண்டிரங் கிய நல்ல மனம் படைத்தோர்.

192. அந்தத் துன்பம் இனியும் வேண்டுமோ? ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறுார்ச் சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய வினை முடித்தன்ன இனியோள் மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

- - இளங்கீரனார் நற் 3 “நெஞ்சே, ஈன்ற பருந்து அடைகாக்க உட்கார்ந்து வருந்தும் படியானதும், வானத்தைத் தொடும் உயர்ந்த கிளை களை யுடையதும், பொரிந்த அடிமரத்தையுடையதுமான வேப்ப மரத்தின் புள்ளிகளையுடைய நிழலிலே பொன்னை உரைக்கும் கல்லைப் போல வட்டமான அரங்கு அமைத்து தம் தொழில் கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காயை விளை யாட்டுக் கருவியாகக் கொண்டு ஆடுவர் அங்கே வில்லை ஏராகக் கொண்டு உழும் உழவர் உளர். அவர் வழிப்பறி செய்வோர். அவரது வெய்ய குடியிருப்பினை யுடைய சிறுார் உண்டு. அந்தக் காட்டின் வழியாக முன்னொரு சமயம் யான் சென்றபோது, என் வலிமையைத் தொலைத்த மாலைக் காலத்தில் யான் நினைத்த செயல் ஒன்றுண்டு கருதிய செயல் முடிந்தபோது ஏற்படும் இன்பம் போன்ற வளான இனிய என் காதலி, மனையில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி வைத்து அன்போடு என்னை நினைக்கும் மாலைக் காலம்