பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அல்லவா இது - என்று நினைத்தேன் அல்லவா? அதனால் நெஞ்சே, இப்போது யான் வாரேன்” எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்

193. தோழித் தலைவியை தேற்றுதல் சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்கப், பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக், கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பத், தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால்-தோழி, வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே

- நல்வெள்ளியார் நற் 7 "தோழி, வெண்மையான மூங்கிலின் நெல்லை உண்ட, வரிகளையுடைய நெற்றியைக் கொண்ட யானைகள் குளிர்ந்த நறிய மலையில் தூங்கும் சிறிய இலைகளையுடைய சந்தன மரங்கள் வெப்பத்தால் வாடும்படியான பெரிய காட்டில், அச்சமுள்ள, அகன்ற இடத்திலுள்ள சுனையில் நீர் நிறைய வும், பெருமலையின் வரிசைகளில் அருவிகள் ஒலிக்கவும், கற்களை உருட்டிக் கொண்டு இறங்கிக் கடுமையாக வரும் காட்டாற்றில் மிதந்து வரும் மூங்கில்ளை ஒடிக்கும் வெள்ளம் காடுகளை அலைத்து ஒசையிடவும், முழங்கும் ஒசையுடைய இடியோடு முழங்கி மேகம் இப்பொழுதே மழைபெய்ய மின்னுவதைப் பார் தலைவர் சுட்டிய கார்ப் பருவம் வந்தது காண் அவர் வந்து வரைந்து கொள்வார் நீ வருந்தாதே,” என்று பொருள் தேடச் சென்ற தலைவர் திரும்புவார் என ஆற்றினாள் தோழி.

194. தொல்லையின்றிச் செல்வாயாக அழிவிலர் முயலும் ஆர்வமாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டா அங்கு அலமரல் வருத்தம் தீர, யாழ நின்