பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நல் மொழி தேறிய இவட்கே. - ஆசிரியர் ? நற் 10 “பூக்களின் ஒளிமயமான ஊரனே! குடிப்பதற்கு இனிமை யும் குடித்த பின் வெறியூட்டும் கடுமையும் உடைய கள்ளி னையும் அணிகள் அணிந்த நெடிய தேர்களையும் உடை யவர் வெற்றிச் சோழர். அவர் கொங்கர் என்பாரை அடக்கி வைக்க விரும்பினார். வெண்மையான கொம்பானைகளை யுடையவனும் "போஒர்” என்னும் ஊருக்கு உரியவனுமான பழையன் என்னும் தானைத் தலைவனிடம் தெரிவித்தனர் பழையனின் வேல் தப்பாது வாய்க்கும் தன்மையுடையது அவ்வேல் போன்ற உன் பிழையாத நல்ல சொற்களை நம்பித் தெளிந்தவள் இவள். இவளது அண்ணாந்து நிமிர்ந்துள்ள அழகிய கொங்கைகள் தளர்ந்து சாய்ந்த காலத்திலும், பொன் போன்ற இவளது மேனியிலே கருமணி போலத் தாழ்ந்து தொங்கும் நல்ல நீண்ட கூந்தல் நரையோடு முடிக்கப்படும் முதுமைக் காலத்திலும் இவளைக் கை விடாது காப்பாயாக' என்று உடன்போக்கிற்கு உகந்த தலைவியை அழைத்துச் செல்லும் தலைவனிடம் கண்ணிர் மல்கத் தோழி உரைத்தாள் 196. உடன் போக்கு உடன்பாடில்லை! விளம்பழம் கமழம் கமஞ்சூற் குழிசிப் பாசம் தின்ற தேய் கால் மத்தம் நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் அரி அமை சிலம்பு கழிஇ, பல் மாண் வளி புனை பந்தொடு வைஇய செல்வோள், 'இவை காண்தோறும் நோவர் மாதோ, அளியரோ அளியர் என்ஆயத்தோர் என நும்மொடு வரவுதான் அயரவும், தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே,

- கயமனார் நற் 12 “நிறைந்த கருப்பம் காணப்படும் வயிறு போன்ற தயி ருடைய தாழிப் பானையில் விளாம்பழம் கமழும் அத்