பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உறுதி குட்டுவனது மதில் அழியும்படி இடித்தொடித்துப் பகலில் தீ வைத்துப் பாழ்செய்தவன் செம்பியன் அப் போரைக் காட்டிலும் மிகப்பெரிய அலர் உண்டாகும்படி தலைவர் பிரிந்து போனாரெனினும் அவர் நட்புடையவர் மலர் தலை கவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தள் மணக்கும் அழகிய மலைச்சாரலில் தன் இனம் அமைந்த வலிய ஆண் யானை பெரும் மலைப்பாம்பின் வாய்ப் பட்டது இதனை அறிந்த பெண் யானை நீங்காத துய ரோடு அச்சம் கொண்டு ஒலிக்கும் பேரொலி நீண்ட மலையின் பிளப்புகளில் எதிரொலிக்கும் அவ்வாறானதும் கடிய விலங்குகள் பொருத்தியதுமான காட்டைக் கடந்து சென்றவர் அன்பராதலால் அவர் குறித்த பருவத்து வருவர் அவர் வாழ்க" என்று தலைவி வாழ்த்தினாள்

198. நெஞ்சே, பொருளா? காதலியா?

புணரின் புணராது பொருளே பொருள்வயிற் பிரியின் புணராது புணர்வே ஆயிடைச் செல்லினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு உரியை - வாழி, என் நெஞ்சே, பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஒடு மீன் வழியின் கெடுவ, யானே, விழுநீர் வியலகம் தூணி ஆக எழு மாண் அளக்கும் விழு நிதி பெறினும், கனங்குழைக்கும் அமர்ந்த சேயரி மழைக் கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; எனைய ஆகுக! வாழிய பொருளே

- சிறைக்குடி ஆந்தையார் நற் 16 “பொருள், காதலியோடு இருந்தால் வந்தடையாது; பொருள் வயின் பிரிந்தால் காதலியோடிருக்கும் இன்பம் கிடையாது என் நெஞ்சே, பொருளுக்குச் செல்வதும் செல்லாதிருப்பதுமாகிய இரண்டில் ஒன்றை நல்லதைத் தேர்ந்தெடுத்ததற்கு நீ உரிமையுடையாய் ஆதலால் வாழ்க! பொருள்களோ, வாடாத பூக்களையுடைய பொய்கையின் நடுவில் ஒடும் மீனின்வழி மறைந்து அழிவதுபோல இருந்த