பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 107

இடம் தெரியாமல் அழிந்து போகும். யானோ, சிறந்த கடல் சூழ்ந்த அகன்ற உலகமே அளக்கும் கருவியாகக் கொண்டு ஏழு முறை அளக்கத்தக்க சிறந்த செல்வத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அதனை விரும்பேன் இக் கனங் குழையாகிய என் காதலியின் மாறுபட்ட செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்கள் பொருத்தி இனிதாகப் பார்க்கும் பார்வை யால் யான் ஆற்றலழிந்தேன் ஆதலால் பொருளே! நீ எத் தன்மையானாலும் ஆகுக. நீ வாழ்க’ என்றான் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சினைத் தலைவன்.

199. விரைவில் வருவார் அவர்! பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் வாழி - தோழி, - மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், கானல்அம் தொண்டிப் பொருநன்,வென் வேல் தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, நெஞ்சம் நடுக்குறுஉம் துஞ்சா மறவர் திரை தபு கடலின் இனிது கண் படுப்பக், கடாஅம் கழிஇயகதன் அடங்கு யானைத் தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.

- பொய்கையார் நற் 18 "தோழி, வருத்தம் நிறைந்த நெஞ்சத்தோடு பல நினை வாலும் ஏற்பட்ட உன் துன்பங்கள் யாவும் நீங்கத் தலைவன் வருவர். நீ வாழ்வாயாக மூவன் என்பவன் முழு வலிமையை யும் தொலைத்து அவனது முள் போன்ற பல்லைப் பிடுங்கிப் பதித்த கதவையுடைய கடற்கரைச் சோலையுடைய அழகிய தொண்டி நகரின் தலைவனும், வெற்றிதரும் வேற் படை உடையவனும், பகைவரால் வெல்ல முடியாத தானையை உடையவனுமான பொறையன். என்பானின் பாசறையில், யானை ஒன்றால் நெஞ்சம் நடுங்குற்றுத் தூங்காத வீரர்கள், அது மதம் நீங்கிச் சினம் அடங்கியதால், அலை அடங்கிய கடல்போல இனிமையாகக் கண்முடி உறங்கினர். அதன் பெரியதான நிலையிலுள்ள ஒற்றைக் கொட்புபோல ஒன்றாகி