பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

விளங்கும் அருவியையுடைய குன்றைக் கடந்து சென்றவர் வருவர். நீ வருந்தாதே,” என்று தோழி, ஆற்றாத தலைவி யிடம் கூறி அமைதிப் படுத்தினாள்.

200. நல்ல ஒன்றைச் செய்தாய்! பார்பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, கம்பலத்தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் சேறும், நாம் எனச் சொல்ல - சேயிழைl'நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே, செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

- கணக்காயனார் நற் 24 "சேயிழாய்! நிலம் பிளவுபட இறங்கிய வேர், பெரிய கிளை, உடுப்பு பிடித்திருப்பது போன்ற அடிமரம், இவற்றை யுடைய நெடிய விளா மரத்தின் கிளைகளில் மூக்கு ஊழ்த்து விழுந்த பழங்கள், கம்பளம் விரித்தாற் போன்ற பசிய பயிரில், விளையாட்டொழிந்த பந்துகள் கிடப்பன போலப் பரவிக் கிடக்கும். 'அவ் விளாம் பழங்களை உணவாகக் கொண்டு வேற்று நாட்டிற்கு அரிய வழிகளில் யாம் சேறும் என்று தலைவர் கூறலும், அது நன்று என விருப்பத்தோடு நீ கூறினாய். அவ்வாறு கூறியதனால் நீ நன்று ஒன்றைச் செய் தாய். ஆடவர் செயல்படும் மனத்தர். ஆகவே பொருள் ஈட்ட அகல்வர். பொருள் - ஆடவரைக் கவர்வது அதன் பண் பாகும்” என்றாள் தோழி தலைவியிடம் உவந்து கூறினாள்.

201. துணையாய் இணைந்த தவறோ? நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே - செவ்வி சேர்ந்த புள்ளி வெள்அரை விண்டுப் புரையிம் புணர்நிலை நெடுங் கூட்டுப் பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச், சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்