பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 109

முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு கெடு துணை ஆகிய தவறோ? வை எயிற்றுப், பொன் பொதிந்தன்ன சுணங்கின், இருஞ் சூழ் ஒதி, பெருந் தோளாட்கே.

- சாத்தந்தையார் நற் 26 “தலைவனே, உம் பிரிவு உணர்ந்து தலைவியின் வளை யல்கள் கழன்றன. அதற்கு யான் வருந்துகிறேன் அழகு சேர்ந்த, எண் அமைந்த, புள்ளிகளைக் கொண்ட வெளிய அடியையுடைய, மலை போன்ற தொடர்ந்த நிலையிலுள்ள, நெடிய நெறிகூட்டில் போட்டு வைக்கப்பட்ட தொகுதியான நெல்லையுடையது தாய்வீடு. அந்தச் செழிப்பை விட்டு ஞாயிறு தன் வெயிலை முழுதும் வீச, செழித்த பலாக் காய்கள் வாட முடம்பட்ட முதிர்ந்த பலா மரங்களுடைய காட்டில் உம்மோடு வந்த தவறோ? அவள் வளையல்கள் கழன்றன. கெட்டவிடத்து உதவும் துணையள் கூர்மையான பற்கள், பொன் பொதித்து போன்ற சுணங்குகள், கருமை சூழ்ந்த கூந்தல், பெரிய தோள்கள் இவற்றையுடைய தலை விக்குக் கைவளையல்கள் நெகிழ்ந்தன. யான் வருந்துகிறேன்.” என்று தலைவி வேறுபட்டமை கூறி வருந்தினாள் தோழி. 202. கள்வனைப் போலக் கொடியராயினரே என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும், தன் கைக் கொண்டு என்நல் நுதல் நீவியும், அன்னை போல இனிய கூறியும், கள்வர் போலக் கொடியன் மாதோ - மணி என இழிதரும் அருவி பொன் என வேங்கை தாய ஒங்கு மலை அடுக்கத்து, ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் ஒடு மழை கிழிக்கும் சென்னிக் கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே!

- முதுகற்றனார் நற் 28 “என் கையைக் கொண்டு தன் கண்ணை ஒற்றியும், தன் கையைக் கொண்டு என் நல்ல நெற்றியைத் தடவியும், தாய் போல இனிய சொற்களைக் கூறியும் தலைவர் களவுக்